3 குட்டிகளுடன் சாலையில் சுற்றும் புலி: இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதிக்க வேண்டு

3 குட்டிகளுடன் சாலையில் சுற்றும் புலி: இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதிக்க வேண்டு

பில்லூர் வனப்பகுதி சாலையில், மூன்று குட்டிகளுடன் புலி நடமாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி, இருசக்கர வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. மூன்றாவது மாற்று சாலையாக காரமடையில் இருந்து வெள்ளியாடு சென்று கெத்தை முள்ளி சோதனைசாவடி வழியாக உதகைக்கு இந்த சாலை செல்கிறது.

3 குட்டிகளுடன் சாலையில் சுற்றும் புலி: இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதிக்க வேண்டு

இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தச் சாலையில் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான சாலை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளன.

இந்நிலையில், அடிக்கடி வனத்தில் இருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுயானைகள், மான் ஆகியவை இவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

தற்போது, இந்த ஒரு மாதத்திற்கு மேலாக குண்டூர், கெத்தை, முள்ளி சோதனை சாவடி, பில்லூர் அணை, பரளிக்காடு உள்ளிட்ட பகுதியில் 3 குட்டிகளுடன் புலி நடமாடி வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது, முள்ளி சோதனை சாவடி அருகில் 3 குட்டிகளுடன் புலி சாலையை கடந்துள்ளது. அதனை, அவ்வழியாக காரில் சென்ற வாகன ஓட்டுநர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால், இந்த சாலையில் செல்லும் இருசக்கர, கனரக வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

3 குட்டிகளுடன் சாலையில் சுற்றும் புலி: இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதிக்க வேண்டு

மேலும், முள்ளி சோதனைசாவடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழகம் மற்றும் கேரளா மாநில வனத்துறையினர், போலீசார், நக்சல் தடுப்பு போலீசார் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த சாலையில் அதிகளவில் போக்குவரத்து இல்லாததால் புலி சாலையின் ஓரத்தில் வந்து செல்வது இயல்பாக இருக்கும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 குட்டிகளுடன் சாலையில் சுற்றும் புலி: இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதிக்க வேண்டு

மேலும், இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய கேரளா மட்டுமல்லாமல் கோவையில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்த சாலையில் ஆபத்து இருப்பதால், இந்த சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்ய வனத்துறையினர் தடை செய்யவேண்டுமென உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*