7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக தனியார் குடோனில் பதுக்கல்..! உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல்

தனியார் குடோனில் 7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வாய்ப்பு..!

கோவை போத்தனூர் அருகே தனியார் குடோனில் சுமார் 7.2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக தனியார் குடோனில் பதுக்கல்..! உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது. செட்டிபாளையம்–ஈச்சனாரி சாலையில் இருந்த ஒரு தனியார் குடோனில், ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ராமதுறைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தகவலின் அடிப்படையில், வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில், மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில், பறக்கும் படை தனிவருவாய் அலுவலர் குமார், குடிமை பொருள் தனிவருவாய் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வடிவேலன் தலைமையில் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக தனியார் குடோனில் பதுக்கல்..! உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல்

இதையடுத்து, அந்த குடோன் பூட்டி இருந்தது. குடோனின் உரிமையாளர் யார் என்பது தெரியாததால், குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வெங்காய குடோனாக பயன்படுத்தப்பட்டிருந்த அந்த குடோனில் 5 ரூம்களில் ரேசன் அரிசியை மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில், தனியார் குடோனின் பதுக்கி வைத்திருந்த சுமார் 7.2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த குடோனின் உரிமையாளர் மற்றும் ரேசன் அரிசி மூட்டைகளை, அங்கே பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*