தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? சீமான் ஆவேசம்!

11 / 100

சென்னை அரும்பாக்கம் பகுதிகளில் வாழும் பூர்வகுடிகளுக்கு அவர்கள் இதுவரை வசித்த வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? சீமான் ஆவேசம்!

சென்னை அரும்பாக்கம், ஆர்கே நகரில் போன்ற பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காரணமாக மாற்று குடியிருப்புக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை தீவுத் திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்களை அப்புறப்படுத்தப்பட்டு நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் 270 வீடுகளை இடித்து தள்ள தமிழக அரசு முன் வந்துள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? சீமான் ஆவேசம்!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரும்பாக்கம் பகுதி ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா?

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*