பொள்ளாச்சி RTO அலுவலகத்தில் பொதுமக்களை ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு: ஆழியார்.தி.செல்வராஜ்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு செய்வதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆழியார்.தி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி RTO அலுவலகத்தில் பொதுமக்களை ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு: ஆழியார்.தி.செல்வராஜ்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் கடும் அவதிபடுவதாகவும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புத்தரும் புரோக்கர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், புரோக்கர்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏராளமாக வழங்குவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலர் கையொப்பமிட்டாலும் கூட, பல கோப்புகளுக்கு உரியமரியாதைகள் கொடுக்கப்படவேண்டுமாம்.

இன்னும் கூடுதலாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்நிலை முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனைத்து மேசைக்கும் காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து ஆவணங்களும் செல்லுபடியாகிறது.

பொள்ளாச்சி RTO அலுவலகத்தில் பொதுமக்களை ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு

போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு பணம் வாங்கிச் செல்லும் புரோக்கர்களுக்கு முன்வாசல் வழி பொதுமக்கள் பணத்தை கொடுத்து விட்டு ஒவ்வொரு ஜன்னல் ஜன்னலாக, சந்துகளில்தான் அனைத்துவிதமான செயல்பாடுகளும் நடைபெறுகிறது.

பணம் புரோக்கர்கள் மூலமாக அதிகாரிகளுக்கு சென்றாலும், புரோக்கர்களுக்கெல்லாம் முதன்மை புரோக்கர் இருப்பார். பணத்தை முதன்மை புரோக்கரிடம் கொடுக்கவேண்டும். அந்த முதன்மை ‘புரோக்கர்’ அலுவலக பணி நேரம் முடிந்ததும், அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் முதன்மை புரோக்கர் அதிகாரிகளிடம் கொடுத்துவிடுவார்.

பொதுமக்கள் பணத்தையும் கொடுத்து ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு செய்வதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆழியார்.தி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*